விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனம் பறிமுதல்


விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனம் பறிமுதல்
x

விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன், தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், திருபத்கார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினர். தகுதிச் சான்றுபுதுப்பிக்காமலும், அனுமதி (பர்மிட்) இல்லாமல் இயங்கிய தனியார் பள்ளி பஸ்சை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

அதிக பாரம் ஏற்றி வந்த 4 சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 40 ஆ?ிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.


Next Story