மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆறுதல்


மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Markandeyan MLA to the family of the girl who died due to lightning. Comfort

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சோ்ந்த மாரியப்பன் மனைவி மாலதி (வயது 47) என்பவர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த மாலதி குடும்பத்தினரை நேற்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி பெற்று தருவதாக உறுதியளித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடும் பணி நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக எட்டயபுரம் பேரூராட்சி கீழவாசல் பகுதியில் உள்ள தட்டான் குளக்கரைகள் 10 ஆயிரம் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் மரக்கன்றுகளையும் அவர் நட்டினார். நகர் முழுவதும் பசுமை வனமாக மாற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு பாண்டியன் கன்மாய் அருகே ் 25 மெகாவாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை அவர் இயக்கி வைத்தார். அங்கு எட்டயபுரம் பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மின்மோட்டார் அறையை தொடங்கி வைத்தார்.

பின்னர் எட்டயபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் சகர்பான் மற்றும் நகர, ஒன்றிய, மகளிர் அணி, இளைஞரணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story