நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி


நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி
x

Training on Anti-Naxalites Operations

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

நகசலைட்டுகள் தடுப்பு பயிற்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு அதிரடிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் நக்சலைட்டுகள் உருவாகாமல் எவ்வாறு தடுக்க வேண்டும், இடதுசாரி நக்சல்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பது குறித்து விளக்கினார்.

அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட தேவைகள் வேண்டி அரசு அலுவலகங்களுக்கு வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் தடுக்கப்பட்டால் அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு அரசுக்கு எதிராக நக்சலைட்டாக உருவாகிறார்கள். ஆகையால் தனிப்பட்ட முறையில் வரும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கு தோவையான பணிகளை செய்து கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

இது போன்றுதான் வீரப்பன் யானைத்தந்தம் வெட்டி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதைய வட ஆற்காடு, தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்திலும் நக்சலைட்டுகள் செயல்பட்டார்கள். அவர்களை தமிழ்நாடு போலீசார் கூண்டோடு சுட்டுக்கொன்று ஒழித்து விட்டார்கள்.

இந்தியாவில் தற்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளனர். அவர்கள் உருவாகாமல் தடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் தாங்கள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Next Story