பட்டாசு வெடித்து சிதறியதில் காயம் அடைந்த முதியவர் சாவு


பட்டாசு வெடித்து சிதறியதில் காயம் அடைந்த முதியவர் சாவு
x

Elderly man dies after being injured in firecracker explosion

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 62). இவர் கடந்த 10-ந் தேதி வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். பட்டாசு சிதறி முத்துராஜ் மீது விழுந்தது. இதில் தீக்காயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு காயத்தின் காரணமாக வலி ஏற்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் ரம்யா அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story