கால்நடை மருத்துவ முகாம்
Veterinary Camp
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராவரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பூங்கான் வட்டத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் தலைமை தாங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் அக்ராவரம் ஊராட்சிக்குட்பட்ட பூங்கான் வட்டம், பெரியான் வட்டம், வீரராகவன் வட்டம், சேசான் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மாடு, உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சினை ஊசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கால்நடை மருத்துவர் தில்லை தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சாமுடி, வார்டு கவுன்சிலர் தேவன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.