கடலூரில் ஓடும் அரசு பஸ்சில் மாணவர்கள் மோதல் விளக்குகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
in Cuddalore Students clash in running government bus There was a commotion due to the smashing of lamps
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கடலூர் கே.என்.பேட்டை அருகில் பஸ் சென்ற போது, பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி மோதிக் கொண்டனர்.
தப்பி ஓட்டம்
அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ஆத்திரத்தில் பஸ்சில் இருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர். உடனே பஸ்சில் இருந்த பொதுமக்கள் மாணவர்களை தடுத்து, அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் தகராறில் ஈடுபட்ட 4 பேரும், பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் தனசிங்கு (46), திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் யார்?, அவர்கள் எதற்காக மோதிக் கொண்டனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.