கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கோரி ஊர்வலம்
Procession to fill the posts of Village Assistant
ஜமுனாமரத்தூரில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி ஜமுனாமரத்தூரில் ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இங்கு உள்ள வருவாய் கிராமங்களான அமிர்தி, வண்ணாங்குட்டை, குட்டக்கரை, நம்மியம்பட்டு, சீங்காடு, நீப்பலாம்பட்டு, புலியூர், படபஞ்சமரத்தூர், மேல்தட்டியாப்பட்டு, கீழ்தட்டியாப்பட்டு, நெல்லிவாய், பெருமுட்டம் பகுதி கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்பக் கோரி ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் நல சங்கம் சார்பில் ஜமுனாமரத்தூரில் ஊர்வலம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஜமுனா மரத்தூரில் உள்ள இந்தியன் வங்கி முன்பு தொடங்கிய ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.