பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்
BJP
பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, மாநகராட்சியின் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர், அவினாசி, பல்லடம் பகுதிகளை உள்ளடக்கி வடக்கு மாவட்ட பகுதியில் 26 இடங்களில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் பள்ளி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மலர்க்கொடி பங்கேற்று பேசினார். நல்லூர் மண்டலம் பா.ஜ.க சார்பில் ராக்கியாபாளையம் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவினாசி
அவினாசி புதிய பஸ் நிலையம், ஆட்டையாம்பாளையம், அவினாசிலிங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க.நகர தலைவர் தினேஷ்குமார், மேற்கு ஒன்றிய தலைவர் கருணாமூர்த்தி, ஊடகப்பிரிவு சந்துரு உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்டத் துணை தலைவர் வினோத் வெங்கடேஷ், நகரச் செயலாளர் வடிவேல், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, இளைஞர் அணி ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முன்பாக பா.ஜனதா திருப்பூர் வடக்கு மாவட்டம், பொங்கலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே.சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் துரைக்கண்ணன், ராஜமாணிக்கம்இளங்கோ, மகேஷ், விஸ்வநாதன், தர்மலிங்கம், விஷ்ணுராம் மற்றும் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர் பஸ் நிலையம் அருகில் திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. ஒன்றிய துணைத் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நடராஜன், கலைக் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் கதிர்வேல், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விஜயாஸ், ஒன்றிய பொருளாளர்கள் குமார், முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் யுவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்பட அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள் என 50-க்்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர்