பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

Tribal people awareness march

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியினரின் பெருமை தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எம்.படவேட்டான், மாநில துணை பொதுச் செயலாளர் ஆனந்தன், மாநில பொருளாளர் பி.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.முருகன் வரவேற்றார்.

பழங்குடியினரின் பெருமை தினவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு மாநில தலைவர் இருளப்பூ செல்வகுமார் தொடங்கிவைத்தார். ஊர்வலம் பெரியார்சிலை, அண்ணாசிலை, காந்திசிலை வழியாக அருணாசலேஸ்வரர் கோவில் அருகே சென்றடைந்தது.

அங்கு உலக பழங்குடி தலைவர் பிர்சா முண்டாவின் உருவ படத்திற்கு இருளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மீனாமாலனி உள்ளிட்ட ஏராளமான பழங்குடியினர் கலந்து கொண்டனர்.

---

Image1 File Name : 13917621.jpg

----

Reporter : T. ALWIN_Staff Reporter Location : Vellore - VELLORE


Next Story