குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
Bumpy and bumpy road
நாகூர்:
நாகூர் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
நாகூரை அருகே தெத்தி கிராமம் உள்ளது. இந்த தெத்தி சமரசம் நகரில் உள்ள
சுனாமி குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த தெத்தி சாலை முக்கிய சாலையாக இருந்து வருகிறது.
இந்த வழியாக தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை அமைத்து 15 ஆண்டுகளாக ஆவதால் தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
விபத்துகள்
இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நடந்து செல்லும் முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ஹசன் இப்ராஹிம் கூறுகையில், இந்த சாலை சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் தடுமாறி கீேழ விழுந்து விடுகின்றனர். சாலைசேதமடைந்துள்ளதால் வாடகைக்கு வாகனங்கள் கூட வர டிரைவர்கள் மறுக்கின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.