விபத்தில் போலீஸ்காரர் சாவு


விபத்தில் போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை முகமதியர் பட்டினம் பழைய சருகணி ரோடு பகுதியை சேர்ந்தசம்சுதீன் மகன் ஜைனுல் ஆபிதீன் (வயது 23). இவர் காவல் துறையில் 2018-ல் பணியில் சேர்ந்தார். தாம்பரம் போக்குவரத்து டி.சி. முகாம் அலுவலக டிரைவராக வேலை செய்து வந்தார். சென்னை வானகரம் அருகில் உள்ள சிக்னலில் மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஜைனுல் ஆபிதீன் மீது லாரி மோதி அவர் உயிரிழந்தார். ஜைனுல் ஆபிதீன் உடல் நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story