கூத்தாநல்லூரில் இருந்து சார்ஜாவுக்கு வேலைக்கு சென்றவர் சாவு


கூத்தாநல்லூரில் இருந்து சார்ஜாவுக்கு  வேலைக்கு சென்றவர் சாவு
x

foreign job person death

திருவாரூர்

திருவாரூர்;

கூத்தாநல்லூரில் இருந்து சார்ஜாவுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டுத்தர வேண்டும் என மனைவி கலெக்்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

சார்ஜாவுக்கு சென்றார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழமணலி ஊராட்சி காரநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவருடைய மனைவி மகாலட்சுமி. இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக ஜெயபால் சார்ஜாவுக்கு சென்ட்ரிங் வேலைக்கு சென்றார். கடந்த 6 மாதங்களாக ஜெயபால் வீட்டுக்கு பணம் அனுப்பவில்லை.இது குறித்து தொலைபேசியில் அவரது மனைவி கேட்ட போது தனக்கு ஊதியம் வழங்க மறுப்பதாக ஜெயபால் அவரது மனைவியிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்தார்

கடந்த 3 மாதங்களாக அவரிடமிருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இந்தநிலையில் நேற்று காலை சார்ஜாவில் வேலை பார்க்கும் திருச்சியை சேர்ந்த ஒருவர் மகாலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயபால் இறந்து விட்டதாக கூறினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த மகாலட்சுமி தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் தனது கணவர் உடலை சார்ஜாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதபடி மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


Next Story