மருமகன் மீது புகார் அளிக்க விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையம் வந்த பெண் மயிலத்தில் பரபரப்பு


மருமகன் மீது புகார் அளிக்க    விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையம் வந்த பெண்    மயிலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

A woman came to police station after drinking poison

விழுப்புரம்


மயிலம்,

மயிலம் அருகே செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி ஞான சவுந்தரி (வயது 55). இவரது மகள் அருணா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மேலும் அருணாவை திட்டி, ஞானசவுந்தரியின் வீட்டுக்கு அடிக்கடி அனுப்பி வைத்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஞானசவுந்தரி விஷத்தை குடித்து விட்டு மயிலம் போலீஸ் நிலையத்துக்கு வெங்கடேசன் மீது புகார் கொடுக்க சென்றார்.

அப்போது அவர் விஷம் குடித்தது பற்றி அறிந்த இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசர்கள் அவருக்கு முதல் உதவியாக உப்பு கரைசல் தண்ணீரை கொடுத்து அவரை வாந்தி எடுக்க வைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story