மாணவர்கள் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
students apply scholarship
திருவாரூர்;
கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் கூறினார்.
இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு, இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் கடந்த 10-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். புதிய இனங்களுக்கு இணையதளம் டிசம்பர் 15-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் அரசு இணையதளம் www.bcmbcmw.tn.gov.in/wel fschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.