சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்
The toll booth workers protested with torches in their hands
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 46-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story