வருவாய் ஆய்வாளர் தற்கொலை
Revenue inspector commits suicide
தேனி
கம்பம் நாட்டாண்மை நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் இவரது மனைவி சுந்தரி (வயது 56). இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு பவித்ரா (34), ஆதித்யா (32) என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவர் வேணுகோபால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தரி உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story