பட்டா கேட்டு மக்கள் தர்ணா
People are on a dharna demanding a belt
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, கோம்பை தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், பொதுமக்கள் பலர் நேற்று திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் தங்களின் சமுதாய பயன்பாட்டில் உள்ள சமுதாயக் கூட கட்டிடத்தை இடிக்க நடக்கும் முயற்சியை தடுக்க வலியுறுத்தியும், அந்த இடத்துக்கு தங்களின் சமுதாய பெயரில் பட்டா வழங்கக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story