கரூர் வந்த ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு உற்சாக வரவேற்பு
கரூர் வந்த ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அயோத்தியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி ராம ராஜ்ய ரதயாத்திரை புறப்பட்டது. இந்த ரதயாத்திரை 60 நாட்களில் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் சென்று 27 மாநிலங்களுக்கு செல்கிறது. இந்த ரதயாத்திரை அயோத்தியில் இருந்து புறப்பட்டு பீகார், காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது. இந்தநிலையில் கன்னியாகுமாரி, மதுரை, திண்டுக்கல் சென்று நேற்று கரூருக்கு வந்தது.
கரூர் வந்த ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவில் முன்பு ரதயாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. ரதயாத்திரையை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்தனர். இந்த ரதயாத்திரை கரூரில் இருந்து நேற்று நாமக்கல் வழியாக சேலம் சென்றது. வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி மீண்டும் அயோத்திக்கு ராம ராஜ்ய ரதயாத்திரை செல்கிறது.