மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு


மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:58 AM IST (Updated: 16 Nov 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே மெக்கானிக் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 44). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார்.

வேலை முடிந்து, சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடு போயிருந்தது.

வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story