மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்
மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உசிலம்பட்டி,
மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து உசிலம்பட்டி அருகே எழுமலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேடப்பட்டி மண்டல தலைவர் மருதகாளை தலைமையில் ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் மாத்துரான் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பிரிவு அணி மாவட்ட தலைவர் அருளானந்தம், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு அணி மாவட்ட செயலாளர் சாந்தகுமார், மாவட்ட துணை தலைவர் உதயசந்திரன், பா.ஜ.க. நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. மதுரை மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் தலைமையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரையூர்
டி.கல்லுப்பட்டி மேற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பேரையூர் முக்குச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு செய்த தமிழக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வு குறித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலூர் பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் சேவகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜசிம்மன், வழக்கறிஞர் கண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஆனந்தஜெயம், மாவட்ட பொது செயலாளர் ராஜா, செயலாளர் தர்மலிங்கம், மகளிர் அணி செயலாளர் மலர், கச்சிராயன்பட்டி அய்யாவு, ராகவன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் கேட்டுகடையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சந்தோஷ் சுப்ரமணி, செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், உள்ளாட்சி பிரிவு தலைவர் ரமேசன் செல்வராஜன் முன்னிலை வகித்தனர். பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் தலைவர் சீதாராமன், மகளிரணி பிரிவு சித்ராதேவி, அமராவதி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.