ஓடும் பஸ்சில் பணம் திருடிய வாலிபர் கைது


ஓடும் பஸ்சில் பணம் திருடிய வாலிபர் கைது
x

A teenager who stole money from a moving bus was arrested

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவச்சந்திரன்(வயது 36). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று காலை வேலையை முடித்துவிட்டு சம்பள பணம் 500-ஐ வாங்கி, தனது சட்டை பையில் வைத்துக்கொண்டு, தனது நண்பருடன் சொந்த வேலையாக சத்திரம் பஸ் நிலையம் வருவதற்காக, காந்தி மார்க்கெட்டில் இருந்து அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அந்த பஸ் தெப்பகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அவரது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், அவரது சட்டை பையில் இருந்த ரூ.500-ஐ திருடிக்கொண்டு தப்பியோட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவச்சந்திரன், தனது நண்பரின் உதவியுடன் அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்து, புகார் கொடுத்தார். அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி தென்னூர் ஆழ்வார்ப்பேட்டை சின்னச்சாமி நகரை சேர்ந்த சதாம்உசேன்(வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, சதாம் உசேனை கைது செய்தார்.


Next Story