பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி- லேசான காயத்துடன் பேரன் உயிர் தப்பினான்

பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி- லேசான காயத்துடன் பேரன் உயிர் தப்பினான்
x
தினத்தந்தி 16 Nov 2022 3:12 AM IST (Updated: 16 Nov 2022 10:33 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி ஆனார். இந்த விபத்தில் லேசான காயத்துடன் பேரன் உயிர் தப்பினான்.

ஈரோடு

பெருந்துறை

பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றிவிடுவதற்காக சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி ஆனார். இந்த விபத்தில் லேசான காயத்துடன் பேரன் உயிர் தப்பினான்.

பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றி விடுவதற்காக...

பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய தாயார் பத்மாவதி (வயது 66). நேற்று காலை, பத்மாவதி தனது பேரன் ஆதித்யாவை (5) அழைத்துக்கொண்டு அவன் படிக்கும் பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றி விடுவதற்காக வாய்க்கால் மேடு பஸ் நிறுத்தத்துக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு பஸ்சுக்காக ரோட்டோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக பத்மாவதி, ஆதித்யா ஆகியோர் மீது மோதியது.

சாவு

இந்த விபத்தில் பத்மாவதி படுகாயம் அடைந்தார். சிறுவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினான். விபத்தை கண்டதும், அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியில் பத்மாவதி இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story