மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை வாரியம் பிரிவு வாரியாக அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும். மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு வருகை பதிவேடு அமைத்துக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 நேரடியாக வழங்க வேண்டும்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் மாலை வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story