வேலூரில் மாரத்தான் போட்டி


வேலூரில் மாரத்தான் போட்டி
x

வேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

வேலூர்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வேலூர் கோட்டையில் நடந்த போட்டியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட பயிற்சி மருத்து அலுவலர் நிவேதிதா, மாவட்ட நலக்கல்வியாளர் நீதிபதிராஜன், தாசில்தார் செந்தில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டையில் தொடங்கிய மாரத்தான் போட்டி அண்ணாசாலை வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.


Next Story