மேளதாளத்துடன் சென்று கொடிநாள் வசூல்
திருப்பத்தூரில் மேளதாளத்துடன் சென்று கொடிநாள் வசூல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மூலம் படைவீரர் நலனுக்காக படைவீரர் கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேள தாளங்களுடன் தேசியப்படை மாணவர்கள் நகைக் கடை பஜார், முக்கிய வீதிகள், பஸ் நிலையம் வழியாக சென்று கொடி நாள் நிதி வசூல் செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை இடத்து துணை தாசில்தார் டி.கே.சிவனேசன், வருவாய் ஆய்வாளர் வேணுகோபால், கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா உள்பட வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story