கவரிங் கொலுசுகளை நூதன முறையில் அடகுவைத்து மோசடி


ஜோலார்பேட்டை அருகே கவரிங் கொலுசுகளை நூதன முறையில் அடகு வைத்து மோசடி செய்த சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள்கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே கவரிங் கொலுசுகளை நூதன முறையில் அடகு வைத்து மோசடி செய்த சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள்கைது செய்யப்பட்டனர்.

கொலுசு அடகு வைப்பு

ஜோலார்பேட்டை அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அப்பகுதி பொது மக்களிடம் வெள்ளிக் கொலுசு கொடுத்து, அதனை அப்பகுதியில் உள்ள அடகுக் கடையில் அடகு வைத்து பணம் பெற்று தந்தால், கொலுசுக்கு ரூ.1,000 தருவதாக கூறிஉள்ளனர். அதை நம்பிய அப்பகுதி பெண் ஒருவர் வெள்ளிக் கொலுசை பெற்றுக் கொண்டு அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று அந்த வாலிபரிடர்களிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட வாலிபர்கள், அவர்கள் கூறியது போன்று அவருக்கு ரூ.1,000 வழங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த கொலுசுகளை, அடகுக்கடை உரிமையாளர் பரிசோதித்த போது அந்த கொலுசு கவரிங் என்பது தெரியவந்தது.

2 வாலிபர்கள் பிடிபட்டனர்

இதனையெடுத்து அடகுக் கடை ஊழியர்கள் வெள்ளி கொலுசு வைத்த பெண்ணிடம் சென்று தாங்கள் கொடுத்த கொலுசு கவரிங் என தெரிவித்தனர். பின்னர் அவர் தெரிவித்த தகவலின்பேரில் அவர்கள், உடனடியாக அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலத்தை அடுத்த அம்மணி கொண்டலாம்பட்டி அரசமரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் அர்ஜூன் (வயது 38), இவரது நண்பர் சேலம் நெத்திமேடு அழக கவுண்டர் தெருவைச் சேர்ந்த வேலுசாமி மகன் சதீஷ்குமார் (36) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் சேலத்தில் கவரிங் கொலுசுகளை வாங்கி கடந்த ஒரு மாதமாக பொது மக்கள் மூலம் கொடுத்து, அவர்கள் பெயரில் அடகு வைத்து பணம்பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜூன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து கவரிங் வெள்ளி கொலுசு மற்றும் ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story