ஜி.பி.பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா


ஜி.பி.பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா
x

ஜி.பி.பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி நிறுவனர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். முதல்வர் டாக்டர் தீன்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவிகள், பேராசிரியகள் கல்லூரி வளாகத்தில் கரும்பு தோரணம் கட்டி, புதிய பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இயக்குனர் டாக்டர் பிரபாகர், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story