கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி


கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூரில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழநத்தம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முகமது ரில்வான் (வயது 19).இவர் திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தாயார் சர்மிளா பேகத்துடன் நாகூர் தர்காவிற்கு பிரார்த்தனை செய்ய வந்துள்ளார்.பின்னர் அவர்கள் சில்லடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது முகமது ரில்வான் கடலில் குளித்த போது எழுந்த ராட்சத அலை அவரை இழுத்து சென்றது. இதனை கண்ட சர்மிளா பேகம் சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கடலில் மூழ்கிய மாணவரை தேடினர்.இந்த நிலையில் நேற்று மாலை சாமந்தான் கடற்கரையில் முகமது ரில்வான் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story