பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது


பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
x

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி வளர்மதி (வயது 50). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான ராம்குமார் (51) வளர்மதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த வளர்மதியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வளர்மதி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story