நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
கோத்தகிரி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர் புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது. முகாமை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார். மகளிர் உதவி திட்ட அலுவலர் குமரவேல் அனைவரையும் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், தேவராஜ், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்று தங்களது நிறுவனத்தைப் பற்றியும் அதில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறினர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொண்டனர். இதில் தகுதி உள்ளவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தனியார் நிறுவனங்கள் தெரிவித்தனர். முடிவில் வட்டார மேலாளர் தீபா நன்றி கூறினார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.