வீட்டின் ஓட்டை பிரித்து நகை-பணம் திருட்டு
வீட்டின் ஓட்டை பிரித்து நகை-பணம் திருட்டு
கபிஸ்தலம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமம் மேல தெருவில் வசிப்பவர் பெருமாள்(வயது55). விவசாயி. இவரது மனைவி தெய்வக்கண்ணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று பெருமாள் அருகில் உள்ள வீரமாங்குடி மடம் கிராமத்திற்கு தனது உறவினர் இறந்த துக்கத்திற்கு கணவன்-மனைவி வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். மறுநாள் வந்து பார்த்த போது இவர்களது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் இறங்கி அங்கு இருந்த பீரோவை உடைத்து 6 கிராம் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி ேதடிவருகின்றனர்.