மேலமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மேலமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே மேலமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி, விளநகர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மேல மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக விரதம் இருந்த பெண்கள், பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால் ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்மாலை, எலுமிச்சைபழம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தின் முன்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள், அலகு காவடியுடனும், குழந்தைகளை தோளில் சுமந்தும் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story