செஞ்சி அருகேவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
செஞ்சி அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி,
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 58). இவர், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி(46) உள்பட 8 பேருடன் வேனில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நோக்கி ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம் காவலர் குடியிருப்பு அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர புளியமரத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ஜெயக்கொடி, கீர்த்தனா (29), விஜய் (18), ஜெயந்தி (28), வேன் டிரைவர் பிரகாஷ் (32), சுஜித் (7), ஜனனி (25), சவுந்தர்ராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சித்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.