அரளி விதையை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை


அரளி விதையை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2023 12:38 AM IST (Updated: 13 April 2023 12:59 PM IST)
t-max-icont-min-icon

அரளி விதையை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பெரிய மணக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 68). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அப்பாதுரை வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பாதுரை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story