சத்தியமங்கலம் அருகே ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிரசவம்


சத்தியமங்கலம் அருகே  ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
x

சத்தியமங்கலம் அருகே ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி கலாமணி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவருடைய உறவினர்கள் கலாமணியை புஞ்சைபுளியம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசவத்துக்காக அவரை 108 ஆம்புலன்சில் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

சத்தியமங்கலம் பஸ் டிப்போ அருகே சென்றபோது கலாமணிக்கு பிரவச வலி அதிகமானது. இதனால் டிரைவர் தயாநிதி சாலையோரமாக ஆம்புலன்சை நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் பிரசவம் பார்த்தார்.

அப்போது சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் சத்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு டாக்டர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்தார்கள். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளார்கள்.


Next Story