கோவில் திருவிழாவில் சாமி கும்பிட வந்த பெண்களிடம் 17 பவுன் நகை திருட்டு
கோவில் திருவிழாவில் சாமி கும்பிட வந்த பெண்களிடம் 17 பவுன் நகை திருட்டு
பேரையூர்,
மதுரை அருகே டி.கல்லுப்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுர் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். இந்த நிலையில் திருவிழாவில் சாமி கும்பிடுவதற்காக வந்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கழுவன்சேரியை சேர்ந்த அங்கம்மாள்(வயது 65) என்பவரிடம் 2 பவுன் நகை, அதே ஊரை சேர்ந்த பழனியம்மாளிடம் 3 பவுன் நகை, வி.அம்மாபட்டியை சேர்ந்த கலாவதியிடம் 3 பவுன் நகை, கே.சத்திரப்பட்டியை சேர்ந்த வேலுத்தாயிடம் 3 பவுன் நகை, திண்டுக்கல் மாவட்டம் தோப்புப்பட்டியை சேர்ந்த லட்சுமியிடம் 2 பவுன் நகை, காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்த செல்லாயிடம் 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.