ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை: கோவில்களில் திருவிளக்கு பூஜை
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதேபோல் பூங்காநகர் மகாசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில், உச்சயினி மாகாளியம்மன் கோவில், தெற்கூர் அம்மன் கோவில், காரக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி 2-வது வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காரையூரில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து சுவாமிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காரையூர் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.