குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
Free Coaching Class for Group-2 Examination
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 (முதன்மை தேர்வு) தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டி தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.