மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்
வீரபாண்டி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு மெயின் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). கடந்த 10-ந்தேதி இவர், வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கு தேனி-கம்பம் பைபாஸ் சாலையில் உள்ள சலூன் கடை முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வீரபாண்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார்சைக்கிளை திருடியது, 18 வயது சிறுவன், கம்பம் அண்ணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story