மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 226 மாணவ-மாணவிகள்


மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 226 மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 16 Nov 2022 1:03 AM IST (Updated: 16 Nov 2022 5:59 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 226 மாணவ-மாணவிகள்

மதுரை


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவம் படிப்பதற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதுபோல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். இந்த நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் நேற்று தொடங்கியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்த மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு தங்களது பெற்றோர்களுடன் வந்து முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டனர். புதிதாக மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக, முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் பூக்கள் கொடுத்தும், கைகுழுக்கியும் வரவேற்றனர்.

இதுகுறித்து கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூறுகையில், "மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 250 இடங்களில் 226 மாணவர்கள் நேற்று சேர்ந்து விட்டனர். மீதமுள்ள 24 பேர் வரும் நாட்களில் சேர இருக்கின்றனர்" என்றார்.


Next Story