மகளிர் சுய உதவிக்குழுவினர் பெயரில் ரூ.27 லட்சம் கடன் பெற்று மோசடி


மகளிர் சுய உதவிக்குழுவினர் பெயரில் ரூ.27 லட்சம் கடன் பெற்று மோசடி
x

Fraud by taking loan of Rs 27 lakh in the name of Women's Self Help Group

திருச்சி

ரூ.27 லட்சம் கடன்

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஷர்மிளா, ரேஷ்மா, கரிஷ்மா, தாஜு, நிஷா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள், பணமோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று உறையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கிறோம். இந்த நிலையில் குழுவின் தலைவி எங்களின் பெயரில், ஒரு வங்கியில் மொத்தம் ரூ.27 லட்சம் கடன் பெற்றார். பின்னர் அந்த தொகைக்கான தவணையை வாரந்தோறும் அவரே செலுத்தி வந்தார்.

தலைமறைவு

இந்த நிலையில் அவர், தனது கணவருடன் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திடீரென வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். தற்போது வங்கி அதிகாரிகள் எங்களிடம் வாரந்தோறும் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் நாங்கள் வாங்காத கடனுக்கு 2 வாரமாக பணத்தை செலுத்தி விட்டோம்.

இப்போது வங்கி அதிகாரிகள் எங்களை மிரட்டுகிறார்கள். எனவே எங்கள் பெயரில் பணத்தை வாங்கி மோசடி செய்த கணவன்-மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story