கட்டுமான பொருட்களை திருடிய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது
கட்டுமான பொருட்களை திருடிய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது
ஈரோடு
கவுந்தப்பாடி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமாட்சிபுரம் அம்பேத்கார் வீதியை சேர்ந்தவர் வீரன். இவர் ஈரோட்டை சேர்ந்த தீபக் என்பவரின் நிறுவனத்தில் கட்டுமான பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரமாக கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை பொய்யேரி அருகே குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் வேலைக்கு வந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பிலான 10 சென்ட்ரிங் சட்டர்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த கவுந்தப்பாடி போலீசில் வீரன் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நெல்ைல மாவட்டம் ராதாபுரம் இடிந்தகரையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 38), அவருடைய தம்பி முத்துக்குமார் (32), 18 வயது சிறுவன் கூகலூரை பூவரசன் (24) உள்பட 4 பேரை கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story