சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 20 குழந்தைகள் பிறந்தன
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆங்கில புத்தாண்டில் 20 குழந்தைகள் பிறந்தன.
சேலம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று மட்டும் 20 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என்று ஆஸ்பத்திரி டீன் மணி தெரிவித்தார்.
புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் நர்சுகள், டாக்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு சாக்லெட், கேக் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். நேற்று பிறந்த குழந்தைகள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்தநாளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story