ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
x

செம்பனார்கோவில் ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

மயிலாடுதுறை

பொறையாறு

செம்பனார்கோவில் ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பருத்தி ஏலம்

நாகை விற்பனைக்குழு சார்பில் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2022-ம் ஆண்டுக்கான பருத்தி மறைமுக ஏலம் நேற்று மாலை நடந்தது. டெல்டா மாவட்டங்களில் தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின் (இ-நாம்) மூலம் நடைபெற்ற இந்த பருத்தி ஏலத்தில் சுமார் 1,250 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.இதில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி பஞ்சு ரூ.12 ஆயிரத்து 379-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 865 -க்கும் ஏலம் போனது.

ரூ.1 கோடிக்கு...

இந்த மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story