தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
x

தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டநிலையில், மேலும், மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தேசிய தோ்வுகள் முகமை (NTA) தெரிவித்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story