பின்னலாடைகளை அனுப்பியதற்காக இத்தாலி நிறுவனம் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு அனுப்பிய ரூ.1 கோடியே 20 லட்சத்தை இணையதளம் மூலமாக ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்ய முயன்றது கண்டறியப்பட்டது. துரித நடவடிக்கையால் அந்த பணத்தை மீட்டனர்.

திருப்பூர்

ரூ.1 கோடியே 20 லட்சம்
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஆடைகளை அனுப்பி வைத்து வங்கி கணக்கு மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். ஆனால் இணையதள ஹேக்கர்கள் உள்ளே புகுந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகையை மோசடியாக எடுக்க முயன்றது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் இத்தாலியில் உள்ள நிறுவனத்துக்கு பின்னலாடைகளை அனுப்பி வைக்க ஒப்பந்தம் செய்தது. இத்தாலி நிறுவனம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை சம்பந்தப்பட்ட பின்னலாடை நிறுவனத்தின் வங்கிக்கணக்குக்கு செலுத்தியதாக இ-மெயில் அனுப்பியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனமும் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ஆடைகளை இத்தாலிக்கு அனுப்பி வைத்தது.
ஹேக்கர் கைவரிசை
பொங்கல் விடுமுறை முடிந்த பிறகும் வங்கிக்கணக்கு பணம் வந்து சேராததால் திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் இத்தாலி நிறுவனத்தை தொடர்பு கொண்டது. ஆனால் பணத்தை அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் இ-மெயிலை ஹேக் செய்து, வேறு ஒரு வங்கிக்கணக்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு இத்தாலி நிறுவனத்துக்கு போலி இ-மெயில் அனுப்பியுள்ளனர். இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிவந்தது.
இத்தாலி நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள வங்கி கணக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இங்கிலாந்து நாட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட வங்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாதபடி நிறுத்தி வைத்தது. திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பணம் ஹேக்கர் கைகளுக்கு கிடைக்காமல் தப்பியது. பின்னர் அந்த பணத்தை இத்தாலி நிறுவனத்தின் வங்கிக்கணக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய மோசடி சம்பவத்தில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனம் தப்பியது.
இதுபோன்ற இணையதள மோசடி சம்பவம் குறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.