1¼ கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
இனப்பெருக்கத்திற்காக மன்னர் வளைகுடா கடல் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 1¼ கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
பனைக்குளம்,
இனப்பெருக்கத்திற்காக மன்னர் வளைகுடா கடல் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 1¼ கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மரைக்காயர் பட்டினம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆராய்ச்சி நிலையம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறால் மற்றும் நண்டு குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன.
1¼ கோடி இறால் குஞ்சுகள்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியான வேதாளை கடல் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 1¼ கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மண்டபம் மத்திய மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் மூத்த விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் மற்றும் வேதாளை பகுதியைச் சேர்ந்த மீனவ சங்க தலைவர்கள் மற்றும் ஏராளமான மீனவர்களும் கலந்து கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையிலும் 5 கோடி இறால் குஞ்சுகள் இனப்பெருக்கத்திற்காக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.