மாடுகள் வரத்து அதிகமானதால் ரூ.1½ கோடிக்கு வர்த்தகம்


மாடுகள் வரத்து அதிகமானதால் ரூ.1½ கோடிக்கு வர்த்தகம்
x

பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகமானதால் ரூ.1½ கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

வேலூர்

அணைக்கட்டு

வேலூர் அருகே பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

அதன்படி இன்று நடந்த வாரச்சந்தைக்கு பலமனேர், சித்தூர், வி.கோட்டா மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கறவை மாடுகளும், ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

உயர்ரக கறவை மாடுகளை வாங்க சேலம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாரச்சந்தைக்கு வந்து கறவை மாடுகளை வாங்கி செல்கின்றனர்.

ஒரு கறவை மாடு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை விற்கப்பட்டது. உழவுமாடுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

இதனால் இந்த வாரம் ரூ.1½ கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் கூறினர். மேலும் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரமாக வியாபாரம் மந்தமாக நடந்து வந்தன. இந்த வாரம் அதிகளவில் கறவை மாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதனால் வியாபாரிகள் கறவை மாடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். இதனால் வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து வரும் வாரங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என்றனர்.


Related Tags :
Next Story