கும்பகோணம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை


கும்பகோணம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை
x

கும்பகோணம் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழை

கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமலும், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கும்பகோணம் பகுதியில் மாலை நேரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்தநிலையில் நேற்று கும்பகோணத்தில் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை 4 மணி அளவில் கும்பகோணம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதனால் கும்பகோணத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழைநீரால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த மழையால் கும்பகோணம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story