சேவை குறைபாடு விவகாரம் நோயாளிக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்


சேவை குறைபாடு விவகாரம் நோயாளிக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
x

சேவை குறைபாடு காரணமாக நோயாளிக்கு தனியார் ஆஸ்பத்திரி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சேவை குறைபாடு காரணமாக நோயாளிக்கு தனியார் ஆஸ்பத்திரி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிட்னி கல் அறுவை சிகிச்சை

குமரி மாவட்டம் கோமான்விளையை சேர்ந்த மார்ட்டின் அமலதாஸ் என்பவர் நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தனது கிட்னியில் கல் இருந்ததால் வலி ஏற்பட்டு அதன் சிகிச்சைக்காக சென்றார். உடனே அங்குள்ள டாக்டர் கிட்னியில் உள்ள கல்லை எடுக்க வேண்டுமென அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதற்காக ரூ.60 ஆயிரம் சிகிச்சை கட்டணமாக மார்ட்டின் அமலதாஸ் செலுத்தியுள்ளார். ஆனால் கிட்னியில் இருந்த கற்கள் முழுவதும் அகற்றப்படாததால் மீண்டும் வலி ஏற்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு சரியான மருத்துவ வசதி அளிக்கப்படாததால் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு சென்று மறுபடியும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீதி இருந்த கற்கள் அகற்றப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் நஷ்டஈடு

முழுமையான சிகிச்சை அளிக்காத நாகர்கோவிலுள்ள ஆஸ்பத்திரியிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். ஆஸ்பத்திரி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஆஸ்பத்திரியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட மார்ட்டின் அமலதாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சமும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்காக செலவழித்த தொகை ரூ.90 ஆயிரமும், மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ, 1 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் ஆஸ்பத்திரி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story